சிவகங்கை மகா மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

சிவகங்கை மகா மாரியம்மன் திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகங்கை மகா மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை
X

சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான்.

சிவகங்கை மாவட்டம், வந்தவாசி ரோட்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ பால முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. முன்னதாக மூலவர் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டன.

இதனைத்தொடர்ந்து தனது வாகனத்துடன் நின்ற நிலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ பால முருகப்பெருமானுக்கு எண்ணை காப்பு சாற்றி திருமஞ்சனப் பொடி, மாவு கரைசல், சந்தனம், பால், தயிர், பழங்கள், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதனையடுத்து முருகப்பெருமானுக்கு வெள்ளி அங்கி சாத்தி சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் தீப தூப ஆராதனை காட்டப்பட்டு கோபுர தீபம் மற்றும் பல்வேறு தீபாராதனைகள் நடைபெற்று உதிரிப்பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்யப்பட்டன.

பின்னர் பஞ்சமுக கற்பூர ஆராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மகாமாரி அம்மனையும் ஸ்ரீ முருகப் பெருமானையும் வழிபட்டனர்.

Updated On: 29 Aug 2021 7:08 AM GMT

Related News