/* */

உள்ளூர் வாக்காளர்கள் விடுபட்டதால் வாக்குப்பதிவை நிறுத்துமாறு சிவகங்கை எம்எல்ஏ வாக்குவாதம்

வெம்பனிகிராமத்தைச்சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர்

HIGHLIGHTS

உள்ளூர் வாக்காளர்கள் விடுபட்டதால் வாக்குப்பதிவை நிறுத்துமாறு சிவகங்கை எம்எல்ஏ வாக்குவாதம்
X

சிவகங்கையில் உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவை நிறுத்தி வைக்க வலியுறுத்தி வாக்குவாகத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ- செந்தில்நாதன்

உள்ளூரில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாக்குகள் இல்லாததால் வாக்குப்பதிவை நிறுத்துமாறு சிவகங்கை எம்எல்ஏ வாக்குவாதத்தில் ஈடுபட்டதாவ் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் 8-ஆவது வார்டு, காளையார்கோவில் ஒன்றிய கவுன்சிலர் காண தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இங்கு பாஜக சார்பில் அதிமுக கூட்டணியில் அழகு ராஜா என்பவர் போட்டியிடுகிறார். அதுபோல், திமுக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இந்நிலையில், வெம்பனிகிராமத்தில் உள்ள பள்ளியில் வாக்குப்பதிவின் போது அந்த கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர்

பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அந்த வாக்குச்சாவடிக்கு வந்த சிவகங்கை சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாவட்ட செயலாளருமான பி.ஆர். செந்தில்நாதனிடம், கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் அவர் வாக்குப்பதிவை நிறுத்துமாறு கூறினார் . ஆனால் வாக்குப்பதிவு நிறுத்தப்படவில்லை தொடர்ந்து வாக்கு பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வாக்குச் சாவடியில் தொடர்பில்லாத பலர் அங்கு புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Updated On: 9 Oct 2021 10:53 AM GMT

Related News