ஆம்புலன்ஸ் சேவையை வழங்குவதில் தமிழகத்தில் சிவகங்கைமாவட்டம் 2 -ஆவது இடம்

ஆம்புலன்ஸ் சேவையை வழங்குவதில் சென்னை முதலிடத்திலும் சிவகங்கை மாவட்டம் இரண்டாமிடத்திலும் உள்ளன

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆம்புலன்ஸ் சேவையை வழங்குவதில் தமிழகத்தில் சிவகங்கைமாவட்டம் 2 -ஆவது இடம்
X

தமிழகத்தில் ஆம்புலன்ஸ் சேவையை வழங்குவதில் சிவகங்கை 2ஆவது இடம்

ஆம்புலன்ஸ் சேவையில் சிவகங்கை மாவட்டம் தமிழகத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது சிவகங்கையில் 108 தொலைபேசியில் அழைத்தால், அவசர ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 22 ஆம்புலன்ஸ்கள் சேவையில் உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று புதிதாக இரு ஆம்புலன்ஸ் சேவையை கலெக்டர் மதுசூதன ரெட்டி தலைமையில், அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். ஒரு ஆம்புலன்ஸ் மறவமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எஸ் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மற்றொரு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கியது.

சிவகங்கை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் மேலாளர் ரஞ்சித் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சௌந்தர்ராஜன் கூறும்போது: ஆம்புலன்ஸ் சேவையை வழங்குவதில் சென்னை முதலிடத்தில் உள்ளது. மக்கள் சேவை கேட்டு 7.40 நிமிடங்களில் சேவையை வழங்கி வருகிறது.

சிவகங்கையில் சேவை கேட்ட 1.39 நிமிடத்தில் சேவை வழங்கப்பட்டு வருகிறது . சிவகங்கை மாவட்டம், இரண்டாம் இடம் பெற்றுள்ளது. 4 ஆம்புலன்ஸ்களில் தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு கரண்ட் ஷாக், வென்டிலேட்டர் , மல்டி பாராமீட்டர் ,ரத்த அழுத்தம் ஆக்ஸிஜன் அளவு 5 நிமிடத்திற்கு ஒருமுறை வழங்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சேவை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருப்பாச்சேத்தி காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் சேவை வழங்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்

Updated On: 11 Aug 2021 9:27 AM GMT

Related News