சிவகங்கை அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தை மூட முடிவு

சிவகங்கை அரசு மருத்துவமனையில் செயல்படும் அம்மா உணவகத்தை மூட ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகங்கை அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தை மூட முடிவு
X

சிவகங்கை அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகம்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அம்மா உணவகத்தை கவுன்சிலர்கள் நெருக்கடியால் மூட ஊராட்சி ஊராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகிறது. ஆனால் உணவகம் மூலம் ரூ. 60,000 மட்டுமே வருமானம் கிடைக்கிறது.

இதனால் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் கூடுதலாகக் செலவாகிறது. இந்த தொகையை பொது நிதியிலிருந்து எடுப்பதால் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அம்மா உணவகத்தை மூட ஒன்றிய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி கூறுகையில், மற்ற மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உணவகங்களை நகராட்சி, மாநகராட்சிகளே நடத்துகின்றன. ஆனால், இங்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் நடத்தப்படுகிறது. ஆனால் அதற்குரிய நிதி ஒதுக்கீடு இல்லை. பொது நிதியிலிருந்து செலவழிக்க கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மருத்துவக் கல்லூரி நிர்வாகமும் அம்மா உணவகத்தை நடத்த முன்வரவில்லை என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், அம்மா உணவகத்தை நம்பி இருப்பவர்களின் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது. எனேவ, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 18 July 2021 7:42 AM GMT

Related News

Latest News

 1. தாராபுரம்
  திருப்பூர்: முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
 2. பெரம்பலூர்
  பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது
 3. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 5 பேர்...
 4. திருக்கோயிலூர்
  கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ
 5. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒருவர்...
 6. மயிலாடுதுறை
  ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய...
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்
 8. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 9. காஞ்சிபுரம்
  பொதுமக்கள் ஆறுகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் :ஸ்ரீ...
 10. குன்னூர்
  நீலகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி