சிவகங்கையில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கடையடைப்பு போராட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஸ்டூடியோ மற்றும் வீடியோ ஓளிப்பதிவாளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகங்கையில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கடையடைப்பு போராட்டம்
X

இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஸ்டூடியோ மற்றும் ஒளிப்பதிவாளருக்கு வீடியோ எடுக்கும் பணிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர் கொடுத்து வந்தனர்.

2021 தேர்தலில் வீடியோ எடுக்கும் பணியினை தகுதி வாய்ந்த எங்களுக்கு கொடுக்காமல் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு வழங்கியது.தேர்தல் ஆணையத்தின் இந்த செயலைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம் முழுவதிலும் உள்ள ஸ்டுடியோ, வீடியோ எடிட்டிங் சென்டர், கலர் லேப் மற்றும் புகைப்பட தொழில் சார்ந்த அனைத்து நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து 100 சதவீத கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.

ஸ்டுடியோ, வீடியோ உரிமையாளர் இதுகுறித்து கூறும்போது இனிவரும் தேர்தல்களில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஸ்டூடியோ மற்றும் வீடியோகிராபர்ளுக்கே தேர்தலில் வீடியோ எடுக்கும் பணியின் ஆணையை வழங்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடையை அடைத்து எதிர்ப்பை காட்டியுள்ளோம்.

மேலும் இது சம்பந்தமாக மாநில சங்க நிர்வாகிகளிடம் வழக்கு தொடரவும் கோரிக்கை வைப்போம் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
Updated On: 25 March 2021 6:30 AM GMT

Related News