ஆபாசமான பேச்சு, வலைதளங்களில் வைரலான ஆடியோ: காவலர் பணியிட மாற்றம்

ஆபாசமாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து சம்பந்தப்பட்ட காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆபாசமான பேச்சு, வலைதளங்களில் வைரலான ஆடியோ: காவலர் பணியிட மாற்றம்
X

தேவகோட்டை காவல் உயர் அதிகாரிகளை ஆபாசமாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து சம்பந்தப்பட்ட காவலர் பணியிட மாற்றம்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், விசாரணைக்கு வருபவர்களிடம் மேலதிகாரிகளின் பேரை சொல்லி கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனை கேள்விபட்ட மூன்று மாதங்களுக்கு முன்பு புதிதாக பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டர் சரவணன் காவலர் மூர்த்தியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர் மூர்த்தி, ஆய்வாளரையும், காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷையும் அவதூறாக பேசியுள்ளார். இந்த ஆடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதையடுத்து,உரிய விசாரணை நடத்த தேவகோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

காவலர் மூர்த்தி ஆசிரியராக பணிபுரியும் தனது மனைவியுடன் DSP முன் ஆஜராகி, தெரியாமல் தவறுதலாக பேசி விட்டதாக கூறி, மன்னிப்பும் கேட்டுள்ளார். இருப்பினும் காவல்துறை உயர் அதிகாரிகளை அவதூறாக பேசியதால், காவலர் மூர்த்தியை, சிவகங்கை ஆயுதப்படை பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

மேலும், தலைமை காவலர் மூர்த்தியிடம் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதன் பேரில் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Updated On: 2 Aug 2021 12:52 PM GMT

Related News