/* */

ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேக்கம்: பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி

ரயில்நிலையம், யூனியன் அலுவலகம், நகராட்சி அலுவலகம், கோட்டாட்சியர் ஆகிய அலுவலகங்களுக்கு இப்பாலத்தை கடந்து செல்ல வேண்டும்

HIGHLIGHTS

ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேக்கம்: பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி
X

 சிவகங்கையில் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கையில் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கி உள்ளதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரயில் நிலையம், யூனியன் அலுவலகம், நகராட்சி அலுவலகம்,கோட்டாட்சியர் அலுவலகம் ஆகிய அரசு அலுவலகங்க ளுக்கு, பொதுமக்கள் பேருந்து நிலையத்திலிருந்து இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். இங்கு மழை நீர் தேங்கி வெளியே செல்ல முடியாமல் இருப்பதால் பொதுமக்களும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, புதுக்கோட்டை மாவட்டம், தொடையூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் காரில் கடக்க முயன்ற ஓசூரில் பணிபுரியும் அரசு மருத்துவர் சத்யா, அதில் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதைப் போல, சிவகங்கையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழை நீரில் எவரும் சிக்கி உயிரிழப்பதைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் இந்தப்பாலத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை மோட்டார் வைத்து வெளியேற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Updated On: 4 Oct 2021 8:12 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?