/* */

வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி மனைவி போராட்டம்

வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி கண்ணீர் மல்க போராட்டம்

HIGHLIGHTS

வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி மனைவி போராட்டம்
X

வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி கண்ணீர் மல்க போராட்டம்

மானாமதுரையை அடுத்துள்ள ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவருக்கு செளந்தரம் என்கிற பெண்ணுடன் திருமணமாகி ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன் என்கிற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 31 ஆம் தேதி சவுதி அரேபிய நாட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்திற்கு கம்பி கட்டும் வேலைக்காக சென்றுள்ளார். இரண்டு ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்துவந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி கட்டுமான பணியில் ஈடுபடும்போது சுவர் இடிந்துவிழுந்து அங்கேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ராஜேஸ்வரன் உயிரிழந்தது குறித்து கட்டுமான நிறுவனம் இதுவரை தகவல் எதுவும் தெரிவிக்காத நிலையில் அங்கு உடன் பணிபுரியும் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் மனைவி செளந்திரத்திற்கு தொலைபேசி வழியாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி மனைவி செளந்திரம் தனது குழந்தைகளுடன் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

இந்நிலையில் 50 நாட்களாகியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பினர், ஆட்சியர் அலுவலகத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 26 July 2021 11:05 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்