குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட பணம் இல்லை -கண்ணீருடன் நரிக்குறவர்கள்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட பணம் இல்லை -கண்ணீருடன் நரிக்குறவர்கள்
X

குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட பணம் இல்லை. கண்ணீருடன் நரிக்குறவர்கள் முதல்வருக்கு கோரிக்கை

சிவகங்கை பையூர் கிராம பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர்கள் தங்களது குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட பணம் இல்லையெனவும், தங்களுக்கு உதவ வேண்டுமெனவும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பையூர் கிராம பகுதியில் 250-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பின்றி வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் நரிக்குறவர்கள் ஒன்றாக இணைந்து தங்களது குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் வாங்க கூட பணம் இல்லாமல் சிரமப்படுவதாக ஆவேசத்துடன் தெரிவித்தனர்

அதில் நரிக்குறவர்கள் கூறியதாவது, " நாங்கள் பறவைகளை வேட்டையாடியும், திருவிழாக்கள், பேருந்துநிலையங்களில் ஊசி, பாசி, சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்களை விற்பனை செய்தும் பிழைப்பு நடத்தி வந்தோம். கடந்த ஆண்டு தொடர்ந்து பல மாதங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோல் இந்தாண்டும் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஓராண்டிற்கு மேலாக தொழில் செய்ய முடியவில்லை. ஏற்கனவே வனத்துறை கெடுபிடியால் பறவைகளை வேட்டையாடுவதை நிறுத்திவிட்டோம்.

தற்போது வீட்டிலேயே முடங்கியுள்ளதால் எங்களது குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் கூட வாங்க முடியாமல் தவிக்கிறோம். தமிழக முதல்வர் எங்களுக்கு உதவ வேண்டும்" என்று கூறினர்.

Updated On: 24 May 2021 6:40 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  50 ஆண்டுகளாக பணியாற்றும் எழுத்தர்களுக்கு மரியாதை செலுத்திய...
 2. செஞ்சி
  செஞ்சியில் மருத்துவர்களுக்கு அமைச்சர் பாராட்டு
 3. சினிமா
  வைரலாகும் நடிகை ஸ்ரேயாவின் மழை வீடியோ..!
 4. திருவள்ளூர்
  தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
 5. தமிழ்நாடு
  தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: நான்காம் அலையா?
 6. குமாரபாளையம்
  குமாரபாளையம் பள்ளி,கல்லூரி பகுதி கடைகளில் புகையிலை பொருள் விற்பனை ஜோர்
 7. குமாரபாளையம்
  கைப்பந்து வீரர்களுக்கு சீருடை வழங்கினார் குமாரபாளையம் நகராட்சி...
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் நாடக, திரை கலைஞர் பூ ராமுவிற்கு நினைவேந்தல் கூட்டம்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித்தேர்வு
 10. சினிமா
  நடிகர் மாதவனுடன் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோடியான சிம்ரன்..!