/* */

மருதுபாண்டியர்-பசும்பொன் தேவர் குருபூஜை பாதுகாப்பு: போலீஸார் ஆலோசனை கூட்டம்

வாகன அனுமதிக்கு வரும் 23-ஆம் தேதிக்குள் காவல்துறையிடம் அனுமதி பெற்று அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் செல்ல வேண்டும்

HIGHLIGHTS

மருதுபாண்டியர்-பசும்பொன் தேவர் குருபூஜை பாதுகாப்பு: போலீஸார்  ஆலோசனை கூட்டம்
X

மாமன்னர் மருதுபாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது.

மாமன்னர் மருதுபாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம். நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கில் இன்றுமாலை வரும் 24ஆம் தேதி திருப்பத்தூரில் மருதுபாண்டியர் சகோதரர்களின் 220வது நினைவுதினம் அரசு சார்பாகஅஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 27ம்தேதி காளையார் கோவில் உள்ள மருது சகோதரர்களின் சமாதியில் சமுதாயத்தை சேர்ந்தவர்களால் நினைவு தினம் அனுசரிக்கப்படும். பின்னர் வரும் 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன்னில் நடைபெறவுள்ள முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிகளுக்காக அரசு வழிகாட்டுதலின்படி, விதி முறைகளை பின்பற்றி செயல்படுவது குறித்த ஆலோசனை கூட்டம், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அரங்கில் மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி தலைமையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது.



இதில், ஆட்சியர் மதுசூதனரெட்டி பேசுகையில், நினைவிடங்களுக்கு செல்லும் சமுதாய மக்கள், அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் தற்போது உள்ள கொரோனா நோய்க்கான ஊரடங்கு காலமுறையிலுள்ள விதிகளைப் பின்பற்றியும் அரசு காட்டியுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றியும் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தி அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும், வாகன அனுமதி பெறுபவர்கள் வரும் 23தேதிக்குள் காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். மரியாதை செலுத்த வருபவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வந்து செல்ல வேண்டும். கண்டிப்பாக முக கவசம் அணிந்து கொரோனா தொற்றுநோய்க்கான பரவுதலை தவிர்க்கும்விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். நடைபயணமாக சென்றுஅஞ்சலி செலுத்த அனுமதி இல்லை. முத்தாமலிங்கதேவரின் குருபூஜைக்கு செல்ல விரும்புபவர்கள் ராமநாதபுரமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்விண்ணப்பித்து அங்கு அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், வருவாய் கோட்டாட்சியர் முத்து கழுவன், உதவி ஆணையர்(கலால்) சிந்து, அந்த சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Updated On: 11 Oct 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  5. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  9. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!