சிவகங்கை அருகே மணல் கடத்தல் லாரி டிரைவர் கைது. வழிமறித்த கார் ஓட்டுனர் மாயம்

சிவகங்கை மாவட்டம் திருவேகம்புத்தூர் காவல் நிலைய சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற மணல் கடத்தல் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகங்கை அருகே மணல் கடத்தல் லாரி டிரைவர் கைது. வழிமறித்த கார் ஓட்டுனர் மாயம்
X

மணல் கடத்தல் லாரியை பின்தொடர விடாமல் வழிமறித்த கார் ஓட்டுனர் விஜய்

சிவகங்கை மாவட்டம் திருவேகம்புத்தூர் காவல் நிலைய சோதனைச் சாவடியில் மணல் கடத்திச் சென்ற லாரி நிற்காமல் சென்றது. மணல் கடத்தல் லாரிக்கு பாதுகாப்பாக திமுக கொடி கட்டிய கார். உடன் வந்தது. திருவேகம்பத்தூர் காவலர்கள் புரோஸ்கான், தாஸ் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று பிடிக்க முயற்சித்த போது, திமுக கொடி கட்டிய கார் காவலர்களை செல்லவிடாமல் ரோட்டின் குறுக்கே வண்டியை நிறுத்தி லாரியை தப்பிக்க விட்டது. ஆனால் கார் ஓட்டுனர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் விடுவித்துள்ளனர்.

இது குறித்த வீடியோ இணையத்தில் பரவியது. உடனடியாக இச்சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட எஸ்.பி செந்தில்குமார் தேவகோட்டை பகுதிக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தார்.

மணல் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும், விடுவிக்கப்பட்ட கார், மற்றும் மணல் கடத்திய லாரி மற்றும் ஆகியவற்றை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும் தேவகோட்டை நகர காவல் நிலையம் நேரில் வந்து DSP ரமேஷுக்கு உத்தரவிட்டார் .

இதனை தொடர்ந்து மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டு டிரைவர் பிரபு கைது செய்யப்பட்டார். மேலும் திமுக கொடி கட்டிய காரில் வந்த விஜய் இதுவரை கைது செய்யப்படவில்லை.

Updated On: 22 July 2021 6:42 AM GMT

Related News

Latest News

 1. தாராபுரம்
  திருப்பூர்: முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
 2. பெரம்பலூர்
  பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது
 3. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 5 பேர்...
 4. திருக்கோயிலூர்
  கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ
 5. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒருவர்...
 6. மயிலாடுதுறை
  ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய...
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்
 8. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 9. குன்னூர்
  நீலகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 10. குன்னூர்
  ஊட்டி மலை ரயில் பாதையில் விழுந்த பாறைகள் வெடி வைத்துத் தகர்ப்பு: சேவை...