/* */

சிவகங்கை சங்கடி வீரனார் கோவில் வரசித்தி விநாயகருக்கு கும்பாபிஷேகம்

Veeranar Temple-புதிதாக விநாயகப் பெருமானுக்கு புதிய சிலை பிரதிஷ்டை செய்து திருப்பணிகள் நிறைவடைந்ததை ஒட்டி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

சிவகங்கை  சங்கடி வீரனார் கோவில் வரசித்தி விநாயகருக்கு கும்பாபிஷேகம்
X

சிவகங்கை அருள்மிகு ஸ்ரீசங்கடி வீரனார் திருக்கோவில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் பெருமானுக்கு கும்பாபிஷேகம் விழா

Veeranar Temple-சிவகங்கை அருள்மிகு ஸ்ரீசங்கடி வீரனார் திருக்கோயில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் பெருமானுக்கு கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

சிவகங்கை நகர் மானாமதுரை பிரதான சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீசங்கடி வீரனார் திருக்கோயிலில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் பெருமானுக்கு ஏக கால பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றன. இத்திருக்கோயிலில்புதிதாக விநாயகப் பெருமானுக்கு புதிய சிலை பிரதிஷ்டை செய்து விமானம் கட்டப்பட்டன திருப்பணிகள் நிறைவடைந்ததை ஒட்டி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

முன்னதாக சுவாமி சந்நிதி முன்பு புனித நீர் அடங்கிய நவக் கலசங்களைை பிரதிஷ்டை செய்து யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து பசுமாட்டிற்கு புனித நீரால் அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பூஜை நடந்தன. பின்னர் 108 மூலிகை பொருட்கள் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்து மகா பூர்ணாஹுதி அளிக்கப்பட்டன இதனையடுத்து கலசத்திற்கு உதிரிப்பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது கோவிலை சுற்றி வலம் வந்து விமான கலசங்களை சென்றடைந்தது விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளை நடத்தி வேத மந்திரங்கள் முழங்க புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டன. கலசத்திற்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் விநாயகப்பெருமானை சிறப்பு அலங்காரம் செய்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வரசித்தி விநாயகரை வழிபட்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 19 March 2024 5:33 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  3. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  6. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?
  8. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்
  9. லைஃப்ஸ்டைல்
    'பாரபட்ஷம்' நியாயத்தை கொல்லும் கூர்வாள்..!
  10. மதுரை
    மதுரை வாக்குச்சாவடியில் காவி முண்டாசு கட்டிய தேர்தல் அலுவலர்!...