திருப்பத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

சிவகங்கை அருகே திருப்பத்தூரில் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருப்பத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
X

கிருஷ்ணருக்கு வண்ண மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்று கோபுர தீபம், கும்ப தீபம், நாக தீபம் மற்றும் பல்வேறு தீபாராதனைகள் நடைபெற்றன.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நகர மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவிலில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

முன்னதாக நின்ற நாராயண பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி தாயார்க்கு சிறப்பு பூஜையும் தீபாராதனையும் காட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோவில் மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீ கிருஷ்ணர் சுவாமியை எழுந்தருளச் செய்தனர். இதனையடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று பால் தயிர் திருமஞ்சனம் பொடி மாவு கரைசல் மஞ்சள் பழங்கள் தேன் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமிக்கு சந்தனம் சாற்றப்பட்டு துளசி மாலை அணிவித்து தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர், கிருஷ்ணருக்கு வண்ண மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்று கோபுர தீபம், கும்ப தீபம், நாக தீபம் மற்றும் பல்வேறு தீபாராதனைகள் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து சோடச உபசாரம் மற்றும் துளசி கொண்டு அர்ச்சனைகள் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீகிருஷ்ண பகவானை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு பரத நாட்டிய நிகழ்வு நடைபெற்றது.

Updated On: 30 Aug 2021 2:42 PM GMT

Related News

Latest News

 1. தாராபுரம்
  திருப்பூர்: முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
 2. பெரம்பலூர்
  பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது
 3. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 5 பேர்...
 4. திருக்கோயிலூர்
  கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ
 5. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒருவர்...
 6. மயிலாடுதுறை
  ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய...
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்
 8. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 9. குன்னூர்
  நீலகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 10. குன்னூர்
  ஊட்டி மலை ரயில் பாதையில் விழுந்த பாறைகள் வெடி வைத்துத் தகர்ப்பு: சேவை...