/* */

ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம்: சிவகங்கையில் வெற்றி கொண்டாட்டம்

ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் பெற்றதை அடுத்து சிவகங்கையில் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி.

HIGHLIGHTS

ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம்: சிவகங்கையில் வெற்றி கொண்டாட்டம்
X

ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் பெற்றதையடுத்து, சிவகங்கையில் நேஷனல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் பெற்றதை அடுத்து, சிவகங்கையில் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி நேஷனல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் சார்பில் நடைபெற்றது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் பெற்றதை கொண்டாடும் விதமாக இன்று சிவகங்கையில் நேஷனல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் சார்பாக அனைத்து விளையாட்டு வீரர்களையும் ஒன்றிணைத்து இந்திய ஹாக்கி அணிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் இந்திய ஹாக்கி மட்டை வடிவிலான பிரமாண்டமான கேக் வெட்டியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடப்பட்டது.

இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணமாக பிரமாண்டமாக வைக்கப்பட்டிருந்த வாழ்த்து அட்டையில் இளைஞர்களும் விளையாட்டு ஆர்வலர்களும் தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்தனர்.

இந்நிகழ்ச்சி நேஷனல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் சேர்மன் பாரூக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சிவகங்கை திமுக நகர செயலாளர் துரை ஆனந்த், கேப்டன் சரவணன், மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுநல சிந்தனையாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Aug 2021 5:34 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்ரீ ராம நவமி உற்சவம்
  2. லைஃப்ஸ்டைல்
    மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் உங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி?
  3. தமிழ்நாடு
    திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
  4. கல்வி
    'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
  5. தமிழ்நாடு
    போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்
  6. தமிழ்நாடு
    தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?
  7. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  8. லைஃப்ஸ்டைல்
    மத்தி மீன் சாப்பிட்டா புத்தி கூடுமா..? நீங்களே தெரிஞ்சுக்கங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    இனிமே சமையலுக்கு மட்டுமல்ல... முகம் பளிச் என மாறவும் உதவப் போவது...
  10. ஆன்மீகம்
    விடுதலை விடுதலை பாடல்..! எதில் இருந்து விடுதலை..?