/* */

கொரோனா தடுப்பூசி முகாம் பேனரில் மோடி படம் இல்லை என்றால்... எச்சரிக்கை

இனி வரும் காலங்களில் முகாம் நடைபெறும் இடத்தில் பாரதப் பிரதமரின் புகைப்படம் இல்லை என்றால் பேனர்களை கிழித்து எறியப்படும்

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி முகாம் பேனரில் மோடி படம் இல்லை என்றால்...  எச்சரிக்கை
X

கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடத்தில் பேனரில் மோடி புகைப்படம் இல்லையென்றால் கிழித்து எறியப்படும்- ஊராட்சி ஒன்றியக்குழுக்கூட்டத்தில் துணைத்தலைவர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜேஸ்வரி முன்னிலையில் இன்று மாதாந்திர ஒன்றியக் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய துணைத் தலைவர் ராஜா பேசுகையில், கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பேனரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது ஆனால், பாரதப் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லை. பிரதமர் மோடியின் புகைப்படம் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்றும், காளையார்கோவில் ஒன்றியத்தில் இனி வரும் காலங்களில் முகாம் நடைபெறும் இடத்தில் பாரதப் பிரதமரின் புகைப்படம் இல்லை என்றால் பேனர்களை கிழித்து எறியப்படும். எனது சொந்தப் பணத்தில் பேனர் அடித்து தருகிறேன் என்றும்பேசினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய சுகாதாரத்துறை அலுவலர் பூமிநாதன் பேனர் நாங்கள் அடிக்கவில்லை என்றும் எங்களுக்கு மேலிடத்தில் இருந்து வருவதாக பதில் அளித்தார்.மேலும் ஒவ்வொரு மாதாந்திர கூட்டத்திற்கும் வேளாண்துறை மற்றும் மின்சாரதுறையினர் பங்கேற்காமல் கூட்டத்தை புறக்கணிப்பதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

Updated On: 24 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    விவசாயத்தின் வேதனை – விளைநிலங்கள் விற்பனைக்கு !
  3. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  4. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் தத்துவங்கள்: தமிழ் மொழியின் வழிகாட்டி!
  6. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  7. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  8. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  9. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்