/* */

வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு அரசு அதிகாரிகள் எதிர்ப்பு

விவசாயத்திற்கு கொண்டு செல்லப்படும் வரத்துக் கால்வாயை தூர்வாரும் பணிகளை அரசு அதிகாரிகள் தடுத்து வருகின்றனர்

HIGHLIGHTS

வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு அரசு அதிகாரிகள் எதிர்ப்பு
X

வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு அரசு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சிவகங்கை புறநகர் பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஆயுதப்படை காவலர் குடியிருப்புகள் வழியாக பையூர் கண்மாய்க்கு செல்லும் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி முதல் தூய்மைப் பணி மேற்கொள்வதில் ஒரு பகுதியாக கால்வாய்கள் தூர்வாரும் பணி மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பையூர் கிராமத்தில் வரும் வரத்து கால்வாயில் தூர்வாரும் பணி, கடந்த ஒரு வார காலமாக மாவட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான ஜேசிபி இயந்திரம் மூலம் நடைபெற்று வருகிறது.

கால்வாய் தூர்வாரும் பகுதியில் அரசு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர் அவர்கள் கால்வாயை ஆக்கிரமித்து பாத்ரூம், கிணறு, கார் நிறுத்தும் இடம் என கட்டிடங்கள் கட்டியிருப்பது கண்டறியப்பட்டு அவற்றை அகற்றும் பணி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு அதிகாரிகள்.தங்கள் வீடுகளில் திருடு போய்விட்டதாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி மிரட்டுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். விவசாயத்திற்கு கொண்டு செல்லப்படும் வரத்துக் கால்வாய் அரசு அதிகாரிகளை ஆக்கிரமித்தும், தூர்வாரும் பணியில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்தும் வகைகள் மிரட்டும் போக்கினை கைவிட்டு விவசாயம் செழிக்க உதவ வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 9 Oct 2021 1:17 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  2. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  3. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  6. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  7. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  8. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  9. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  10. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி