/* */

சிவங்கை மாவட்டத்தில் உர தட்டுப்பாடு இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு நிலவுவதாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

HIGHLIGHTS

சிவங்கை மாவட்டத்தில் உர தட்டுப்பாடு இருப்பதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு
X

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், வேளாண் இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் யூரியா, டி.ஏ.பி. உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கூட்டுறவு சங்கம் உடன் வந்த உரங்களை அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்கள் மட்டும் வழங்குகின்றனர் ,தனியார் உரக்கடைகளிலும் கிடைப்பதில்லை . இளையான்குடி பகுதிகளில் அதிகளவில் மிளகாய் சாகுபடி நடக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இழப்பீடு தரவில்லை. அதேபோல் நெல் இழப்பீடு மாவட்டத்திலுள்ள 520 வருவாய் கிராமங்களில் 77 கிராமங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. பல இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கல் வழங்க மறுக்கின்றனர். இதனால் இழப்பீட்டு காப்பீட்டை பதிய முடியவில்லை .

சிவகங்கை மாவட்டத்தில் 60 ஆயிரம் வைகை பாசன பரப்பு உள்ளது. பெரியாறு அணை, வைகை அணையில் தண்ணீர் திறக்க வேண்டும், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் முறையாக வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பேசும்போது உரங்கள் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குறைவான பகுதிகளுக்கு மட்டுமே பயிர் காப்பீடு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. விவசாயப் பணிகளுக்கு தடையின்றி மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Updated On: 3 Nov 2021 10:53 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்