/* */

சிவகங்கை, காரைக்குடி அரசு ஐடிஐ.யில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

சிவகங்கை மற்றும் காரைக்குடி அரசு ஐடிஐ யில் சேர்வதற்கு கால அவகாசம் நீட்டிப்பு. மாவட்ட நிர்வாகம் தகவல்.

HIGHLIGHTS

சிவகங்கை, காரைக்குடி அரசு ஐடிஐ.யில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு
X

சிவகங்கை மற்றும் காரைக்குடி அரசு ஐடிஐ யில் சேர்வதற்கு கால அவகாசம் நீட்டிப்பு மாவட்ட நிர்வாகம் தகவல்.

சிவகங்கை மற்றும் காரைக்குடி அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

சிவகங்கை முத்துப்பட்டி மற்றும் காரைக்குடி அமராவதிபுதூர் ஆகிய ஐடிஐ-யில் 2020 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையங்களில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஐடிஐ-களில் உடனடி மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நவம்பர் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை முத்துப்பேட்டை அரசு ஐடிஐ யில் கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர், வெல்டர், ஆடை தயாரித்தல் ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.

காரைக்குடி அமராவதிபுதூர் ஐடிஐயில் பிட்டர், டர்னர், மெக்கானிக், வயர்மேன்,கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர், வெல்டர், உலோக தகடு வேலையால், ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் நேரடி சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் 2 மற்றும் கலர் போட்டோ 5 ஆகியவை கொண்டு வரவேண்டும் ஐடிஐ சேரும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவச பஸ் பாஸ், உதவித்தொகை மாதம் 750 ஆகியவை வழங்கப்படும். என்றும் சிவகங்கை முத்துப்பட்டி ஐடிஐ யில் கூடுதல் விவரங்கள் அறிய 9944 8877 54 மற்றும் 997 6208 265 என்ற செல்லிலும் காரைக்குடி அமராவதிபுதூர் ஐஐடியில் விவரங்கள் அறிய 949 9055 784 மற்றும் 949 9055 785 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 7 Nov 2021 3:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்