முதியோர் பென்சன் கிடைக்க ஏற்பாடு செய்வேன் அமமுக வேட்பாளர் உறுதி

நான் வெற்றி பெற்றால் முதியோர்களுக்கு பென்சன் கிடைக்க வழி வகை செய்வேன் என்று சிவகங்கை அமமுக வேட்பாளர் அன்பரசன் கூறுதி கூறினார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

சிவகங்கை மாவட்ட சிவகங்கை சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக அன்பரசன் தலைமை கழகம் அறிவித்ததில் இருந்து சிவகங்கையில் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து இன்று சோழபுரம் அருள்மிகு வடகரை காளி அம்மனை வணங்கி சிவகங்கை தெற்கு ஒன்றிய பகுதிகளான பெரியகோட்டை ஸ்ரீ ராம் பட்டி பாப்பான்குளம் டீ புதுக்குளம் இடைக்காட்டூர் பதினெட்டாம் கோட்டை மீனாட்சிபுரம் வேம்பத்தூர் என 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று பிரசாரம் மேற்கொண்டார்

டிடிவி தினகரன் ஆட்சி அமைந்தால் முதியோர்களுக்கு 2000 ரூபாய் பென்ஷன் திட்டத்தை அறிவித்திருந்ததால் சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான முதியோர்கள் அமமுக வே வெற்றி பெற பெறவேண்டும் என்று மனநிலையில் உள்ளனர்.

அமமுக சிவகங்கை வேட்பாளர் அன்பரசன் கைகளைப் பிடித்துக்கொண்ட மூதாட்டி கண்டிப்பாக உங்களை வெற்றி பெறச் செய்வோம் என்று வாக்குறுதி அளித்தனர்.

இதனை அடுத்து நான் வெற்றி பெற்ற பின் முதலில் முதியோர்களுக்கு பென்சன் கிடைக்க வழி வகை செய்வேன் என்று வேட்பாளர் அன்பரசன் கூறினார்

இந்தப் பிரச்சாரத்தில் அமமுக இளைஞரணி மாவட்ட செயலாளர் அண்ணாமலை, ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு ,கண்ணன், ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் பிரபு, தேமுதிக கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவராஜன், சரவணன் ,ரமேஷ்

மற்றும் மருதுசேனை மாவட்ட செயலாளர் பூவலிங்கம், மற இளைஞரணி செயலாளர் செந்தில் ,மற்றும் கோகுல மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் காளையப்பன் உள்ளிட்டோர் வேட்பாளருடன் சேர்ந்து வாக்கு சேகரித்தனர் இதில் ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.

Updated On: 27 March 2021 3:09 PM GMT

Related News