/* */

காரைக்குடி தனியார் மூலிகை பண்ணையில் வேளாண் கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா

பல்வேறு மருத்துவ குணமுள்ள ஏராளமான மூலிகைச் செடிகள் வளர்த்து வருகின்றனர்

HIGHLIGHTS

காரைக்குடி தனியார் மூலிகை பண்ணையில்  வேளாண் கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா
X

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள தனியார் மூலிகைப் பண்ணையை பார்வையிட்ட புதுக்கோட்டை குடுமியான்மலை  வேளாண் கல்லூரி மாணவர்கள்

காரைக்குடி சொனா வானா மூலிகை பண்ணையில் இரண்டாம் ஆண்டு வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலாநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள ஆவுடபொய்கை என்ற இடத்தில் சொனா வனா மூலிகை பண்ணை உள்ளது இந்த மூலிகை பண்ணையை சித்த மருத்துவர் சொக்கலிங்கம் மற்றும் அவரது மகன்கள் சித்த மருத்துவர். ரவிச்சந்திரன், மணிகண்டன் ஆகியோர் 48 ஏக்கரில் மூலிகை பண்ணை அமைத்து பல்வேறு மருத்துவ குணமுள்ள ஏராளமான மூலிகைச் செடிகள் வளர்த்து வருகின்றனர்.

இந்த மூலிகைப் பண்ணையை, புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், கல்வி சுற்றுலா திட்டத்தில் இந்த மூலிகை பண்ணைக்கு வந்திருந்தனர்.

அனைவருக்கும், சித்தமருத்துவர். சொக்கலிங்கம், மூலிகைச் செடிகள் பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் மாணவ-மாணவிகளுக்கு விளக்கிக் கூறினார். அதன் பின்பு மாணவ மாணவியர் கூறும்பொழுது, தாங்கள் இதுவரை பெயரை மட்டும் கேள்விப்பட்டிருந்த மருத்துவ குணமுள்ள மூலிகை செடிகளை இன்று நேரில் பார்த்தோம். பல்வேறு வகை மூலிகை செடிகளை இன்று நேரில் பார்த்து தெரிந்து கொண்டது தங்களது வேளாண் படிப்பிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தனர்

Updated On: 8 Oct 2021 5:57 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்