/* */

உள்ளாட்சி தேர்தலை நினைத்து துவண்டு விடவேண்டாம்: அதிமுக எம்எல்ஏசெந்தில்நாதன்

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை அனைத்து தொகுதிகளிலும் அமோகமாக வெற்றி பெற பாடுபட வேண்டும்

HIGHLIGHTS

உள்ளாட்சி தேர்தலை  நினைத்து துவண்டு விடவேண்டாம்:  அதிமுக எம்எல்ஏசெந்தில்நாதன்
X

சிவகங்கையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் பேசுகிறார், சிவகங்கை எம்எல்ஏ ஆர். செந்தில்நாதன்.

உள்ளாட்சி தேர்தலை நினைத்து துவண்டுவிடாமல் பீனிக்ஸ் பறவை போல் எழுந்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை அனைத்து தொகுதிகளிலும் அமோகமாக வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றார் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன்.

சிவகங்கை மாவட்ட அதிமுக சார்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் முன்னாள் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மாவட்ட செயலாளரும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான ஆர். செந்தில்நாதன் பேசுகையில், உள்ளாட்சி தேர்தலை நினைத்து துவண்டுவிடாமல் பீனிக்ஸ் பறவை போல் எழுந்து, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை அனைத்து தொகுதிகளிலும் அமோகமாக வெற்றி பெற பாடுபட வேண்டும். வருகின்ற 17 ஆம் தேதி அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகளிலும் அதிமுகவின் கொடியினை ஏற்றி பொன்விழா ஆண்டை கொண்டாட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, கருணாகரன், கோபி, நகர செயலாளர் ராஜா உட்பட அதிமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Oct 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  8. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  9. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்