முடிகண்டம் பெரிய கண்மாய் தண்ணீரை விவசாயம் செய்யும் 4 பேர் திறந்து விடுவதாக மறியல்

சிவகங்கை மாவட்டம் முடிகண்டம் பெரிய கம்மாயில் தற்போது பெய்யும் மழையினால் நீர்வரத்து அதிகரித்தது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
முடிகண்டம் பெரிய கண்மாய் தண்ணீரை விவசாயம் செய்யும் 4 பேர் திறந்து விடுவதாக மறியல்
X

சிவகங்கை அருகே கண்மாய் தண்ணீர் பாசன விவகாரத்தில்  ௪  பேரின் செயலைக்கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட  விவசாயிகள்.

முடிகண்டம் பெரிய கம்மாய் தண்ணீரை கண்மாய் உள்ளே விவசாயம் செய்யும் நான்கு பேர் உடைத்து விடுவதாக பொதுமக்கள் கரும்பாவூர் விலக்கு அருகே சாலை மறியல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், முடிகண்டம் பெரிய கண்மாயில் தற்போது பெய்யும் மழையினால் நீர்வரத்து அதிகரித்து, கண்மாயில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இந்த முடிகண்டம் பெரிய கண்மாயை நம்பி பனையூர், சித்தூர், கரும்பாவூர், நல்லாவூர், முத்துப்பட்டி, என பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், குமாராபட்டியை கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிலர் முடிகண்டம் பெரிய கண்மாய்க்குள் ஐந்து ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.

கண்மாயில் தண்ணீர் நிறைந்தால் தங்களது விவசாயம் பாதிக்கும் என்று யாருக்கும் தெரியாமல் இரவு நேரங்களில் கண்மாயில் உள்ள தண்ணீரை கரையை உடைத்து வெளியேற்றி விடுவதாகக்கூறி, மாவட்ட ஆட்சியர்,வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு அளித்தனர். ஆனால், மீண்டும் மீண்டும் குமாரபட்டி கிராமத்தை சேர்ந்தஒரு சிலர் தங்களது சொந்த சுயலாபத்திற்காக கண்மாயை உடைத்து விடுவதாக கூறி இன்று கரும்பாவூர் விளக்கு அருகே முடிகண்டம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை சிவகங்கை சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கிராம மக்களிடையே சிவகங்கை வட்டாட்சியர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Updated On: 10 Oct 2021 2:07 PM GMT

Related News