/* */

23 நொடியில் 14 அடி உயர கயிற்றில் ஏறி உலக சாதனை படைத்த சிறுவன்

சிவகங்கை அருகே 23 நாெடியில் 14 அடி உயர கயிற்றில் வேகமாக ஏறும் சிறுவனின் முயற்சியை பலரும் பாரட்டி வருகின்றனர்.

HIGHLIGHTS

23 நொடியில் 14 அடி உயர கயிற்றில் ஏறி உலக சாதனை படைத்த சிறுவன்
X

14 அடி கயிற்றில் வேகமாக ஏறிய சிறுவன் வினோத்குமார்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே சூராக்குளம் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார்-கற்பகவள்ளி தம்பதியினர். இவர்களின் இரண்டாவது மகன் சாலிவாகனன் ( 5வயது). இவருக்கு கயிறு ஏறுவதில் மிகுந்த ஆர்வம். கடந்த ஒரு வருடத்திற்கு முன் சாலிவாகனன் பெற்றோர் மரத்தடியில் சேலையை ஊஞ்சல் ஆடுவதற்காக கட்டி உள்ளனர்.

சாலிவாகனின் அக்கா எழிலரசி ஊஞ்சல் ஆடும்போது, அவர் மட்டும் ஊஞ்சல் ஆடாமல் சேலையை பிடித்து விறு விறு என்று மேலே ஏறி உள்ளார். இதைத் தொடர்ந்து கவனித்த சாலியவாகனன் பெற்றோர் 14அடி கயிற்றை மரத்தில் கட்டி, ஏறுமாறு கூறியுள்ளனர். கயிறு ஏறுவதற்கு முன் சில உடற்பயிற்சிகள் செய்துவிட்டு உடனே வேகமாக ஏறியுள்ளார்.

மேலும், ஏற்கனவே இந்திய புக் ரெகார்ட்ஸ் படி 5வயது சிறுவன் 60 நாெடியில் 20 அடிவரை ஏறி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் சாலிவாகனன் 23 நாெடியில், 14அடி வரை வேகமாக கயிறு ஏறி உள்ளார். இதனை பெற்றோர்கள் சிவகங்கை மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரிகளிடம் கூறி உள்ளனர்.

ஆனால், மாவட்ட விளையாட்டுத்துறை 14வயது மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பயிற்சி கொடுக்கப்படும் என்று தெரிவித்து விட்டனர். ஆனால், சாலிவாகனன் பெற்றோர் கூறும்போது, கயிறு ஏறுவதில் இப்போதே ஆர்வமாக உள்ளான். அதனால் நாங்களே முறையாக பயிற்சி அளித்து வந்தோம்.

இதை அறிந்த சோழன் உலக சாதனை புத்தக நிறுவனர், சிறுவனின் பெற்றோரை அணுகி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் முன்னிலையில், உலக சாதனை நிகழ்வினை பதிவு செய்தனர்.

சிறுவன் சாலியவாகனன் 14அடி உயரத்தை 23 வினாடிகளில் ஏறி சோழன் உலக சாதனை படைத்தான். சிறுவனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனர் நீலமேகம் உள்ளிட்டோர் சிறுவனை வாழ்த்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினர்.

Updated On: 4 Aug 2021 4:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு சாப்பிட வேண்டிய மீன்கள் என்னென்ன என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    "நம்பாதே யாரையும்" - மேற்கோள்களும் விளக்கமும்
  3. இந்தியா
    கடும் விமர்சனத்தைத் தூண்டிய தூர்தர்ஷனின் புதிய ஆரஞ்சு லோகோ
  4. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  5. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  6. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e
  7. தொழில்நுட்பம்
    கலக்கும் Nothing Phone 2..! சூப்பர் அப்டேட் அப்பு..!
  8. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  10. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...