/* */

வேட்புமனு தாக்கல் கண்காணிப்பு கேமராவில் பதிவு: மாவட்ட ஆட்சியர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

வேட்புமனு தாக்கல் கண்காணிப்பு கேமராவில் பதிவு: மாவட்ட ஆட்சியர்
X

தேர்தல் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. தொடர்ந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆர்டிஓ முத்துக்கலுவன், பிரபாகரன் மற்றும் நகராட்சி ஆணையர்கள் பேரூராட்சி செயல் அலுவலர்கள் அரசு அதிகாரிகள் அரசியல் கட்சி அரசியல் கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

தேர்தல் அறிவிப்பு வெளியான உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டது. சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகள் உள்ள 285 வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது இந்தத் தேர்தலின் போது 285 இடங்களிலில் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்த உள்ளனர்.

ஒவ்வொரு நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கும் தனித்தனியாக தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு நகராட்சி மற்றும் பேரூராட்சி 9வார்டுகளுக்கு 1 உதவி தேர்தல் அலுவலர் நியமிக்கப்பட உள்ளது. மேலும் இன்று முதல் அந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்திலேயே இருப்பார்கள்.வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடத்தில் கண்காணிப்பு கேமரா பதிவு செய்யப்படும். இது தவிர உதவி ஆட்சியர் நிலையில் உள்ள அதிகாரிகள் ஒவ்வொரு நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடைபெறும் பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடத்தை விதிகள் அமலில் இருக்கும். இந்த தேர்தலில்போது காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும். ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கான சம்பந்தபட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அனுமதி பெறவேண்டும். வாக்கு சேகரிக்க செல்லும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக மூன்று நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும்.

வாக்கு சேகரிக்கும் போது துண்டுபிரசுரம் வழங்கும் போது கண்டிப்பாக கையுறை மற்றும் முக கவசங்கள் அணிந்திருக்க வேண்டும் தேர்தல் பிரச்சாரம் நடக்கும்போது கொரோனா தொற்று நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கோவில்கள் மசூதிகள் தேவாலயங்களில் வழிபாட்டு தலங்களில் பிரச்சாரம் செய்யக்கூடாது. தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அனைத்து பறக்கும் படை அமைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Updated On: 28 Jan 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  2. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  3. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  6. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  7. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  8. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  9. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  10. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி