/* */

பேருந்து மோதி சிறப்பு எஸ்ஐ.,பலி- 2 காவலர்கள் படுகாயம்

சிவகங்கை அருகே பறக்கும் படை காவலர்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் உயிரிழந்த நிலையில், 2 காவலர்கள் படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை அருகே ஊத்திக்குளம் கிராமத்தில் இன்று காலை தலைமையிட வன திட்ட அலுவலர் அசோக் குமார் தலைமையில் பறக்கும்படையினர் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி விட்டு வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிவகங்கையில் இருந்து தாயமங்கலம் நோக்கி வந்த அரசு பேருந்து, சாலையோரம் நின்றிருந்த சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு காவலர்கள் மீது மோதியது. இதில் காவலர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில், சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் மருத்துவமனை செல்லும் வழியில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் கர்ணன் உயிரிழந்தார்.

படுகாயமடைந்த காவலர்கள் சாந்தகுமார், பாலசுப்பிரமணியன் இருவரும், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய டிரைவர் குமார் தலைமறைவாகி விட்ட நிலையில், அவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 26 March 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்