கர்ப்பிணி பெண்களுக்காக இரத்ததான முகாம்: அமைச்சர் பங்கேற்பு

கர்ப்பிணி பெண்களுக்காக இரத்ததான முகாம் அமைச்சர் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினார்கள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கர்ப்பிணி பெண்களுக்காக இரத்ததான முகாம்: அமைச்சர் பங்கேற்பு
X

கர்ப்பிணி பெண்களுக்கு இரத்தம் வழங்குவதற்காக வாலாஜா நவாப் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாமில் அமைச்சர் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரக்கூடிய கர்ப்பிணி பெண்களுக்கு போதிய இரத்த வகைகள் இரத்த வங்கியில் இருப்பு இல்லாததால், இரத்த வங்கியின் வேண்டுகோளை ஏற்று வாலாஜா நவாப் அறக்கட்டளை கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 5 முறை இரத்ததானம் நடத்தி 200க்கும் அதிகமான யூனிட் இரத்தம் இரத்த வங்கிக்கு வழங்கியுள்ளது.

இந்த இரத்த தான முகாமில் அனைத்து சமுதாய மக்களும், இளைஞர்களும் தொடர்ந்து ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்த தானம் செய்து வருகின்றார்கள். சிவகங்கை வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற முகாமில் 42 நபர்கள் இரத்ததானம் செய்தார்கள். இரத்ததான முகாமை தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் பார்வையிட்டு இரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன், மருத்துவக்கல்லூரி இரத்த வங்கியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணவேணி மருத்துவமனையின் RMO முஹம்மது ரபீக் உள்பட மருத்துவமனையிலிருந்து பலரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, சிவகங்கை மாவட்ட ஐக்கிய ஜமாஅத்தின் மாவட்ட தலைவர் நாடாஅன்வர், சிவகங்கை நகர திமுக செயலாளர் துரை ஆனந்தன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த இரத்ததான முகாம் சிவகங்கை வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அன்வர் பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Updated On: 10 Aug 2021 12:19 PM GMT

Related News

Latest News

 1. தாராபுரம்
  திருப்பூர்: முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
 2. பெரம்பலூர்
  பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது
 3. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 5 பேர்...
 4. திருக்கோயிலூர்
  கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ
 5. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒருவர்...
 6. மயிலாடுதுறை
  ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய...
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்
 8. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 9. குன்னூர்
  நீலகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 10. குன்னூர்
  ஊட்டி மலை ரயில் பாதையில் விழுந்த பாறைகள் வெடி வைத்துத் தகர்ப்பு: சேவை...