சிவகங்கை: பாஜக மீனவர் அணி துணைத்தலைவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

சிவகங்கையில், பாஜக மீனவர் அணி துணைத்தலைவர் முத்துப்பாண்டி, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகங்கை: பாஜக மீனவர் அணி துணைத்தலைவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை
X

படுகொலை செய்யப்பட்ட பாஜக மீனவர் அணி துணைத் தலைவர் முத்துபாண்டி.

மதுரை முக்கு நெல்மண்டி தெருவில் வசித்து வரும் முத்துபாண்டி இவர், பாஜக மீனவர் அணி துணைத் தலைவராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இந்த நிலையில், நேற்று மாலை, அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் தேடிச்சென்ற மூன்று நபர்கள், அவர் வீட்டில் இல்லாததால் அங்கிருந்த காரை அடித்து உடைத்தனர்.

பின்னர், வீட்டு அருகே உள்ள டீக்கடையில் அமர்ந்திருந்த முத்துபாண்டியை, மர்ம நபர்கள் மூன்று பேர் கொண்ட கும்பல், அறிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுஅங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அருகில் இருந்தவர்கள் முத்து பாண்டியை மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி முத்துப்பாண்டி உயிரிழந்தார்.

சிவகங்கை மருத்துவமனை முன்பு திரண்டிருந்த முத்துப்பாண்டியன் உறவினர்கள் மற்றும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்ட போலீசார்.

முத்துப்பாண்டியன் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டதால், அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். முத்துப்பாண்டியன் உடல், உடற்கூறு ஆய்வுக்கு சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை குறித்து சிவகங்கை நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம், சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 17 Sep 2021 2:30 AM GMT

Related News

Latest News

 1. பல்லாவரம்
  சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர்...
 2. சங்கராபுரம்
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர்...
 3. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 4. தர்மபுரி
  தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 5. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 6. குன்னூர்
  குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி...
 7. குளித்தலை
  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
 8. கோபிச்செட்டிப்பாளையம்
  கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. தாராபுரம்
  'சிறுவர் செய்யும் தவறுக்கு, பெற்றோர் அபராதம் கட்டணும்'
 10. தமிழ்நாடு
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: ...