சிவகங்கையில் பாஜக பிரமுகர் கொலை வழக்கு: 3 பேர் போலீஸாரால் கைது

நேற்று வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த முத்துப்பாண்டியை, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் வெட்டியது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகங்கையில் பாஜக பிரமுகர் கொலை வழக்கு:  3 பேர் போலீஸாரால் கைது
X

சிவகங்கை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

சிவகங்கையில் நேற்று பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்ட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.சிவகங்கை மதுரை முக்கம் நெல்மண்டி தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் சிவகங்கை மாவட்டம், பாஜக மீனவர் அணி மாவட்ட துணைத் தலைவராக இருந்து வந்த நிலையில், நேற்று மாலை தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த முத்துப்பாண்டியை, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியது. அக்கம் பக்கத்தினர் மீட்டு முத்துப்பாண்டியை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுப்பிவைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிவகங்கை போலீஸார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சிவகங்கை அருகே வைரவன்பட்டியைச் சேர்ந்த சுகுமார், பால்பாண்டி, செல்வேந்திரன் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 17 Sep 2021 3:44 PM GMT

Related News