நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண அனுமதி: வருவாய் இழந்து தவிப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை

அரசு நகர் பேருந்தை பெண்கள் அதிகஅளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருவோர் வருமானத்தை இழந்து பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண அனுமதி: வருவாய் இழந்து தவிப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை
X

அரசு போக்குவரத்துக்கழக நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் வருவாய் இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ ஓட்டுனர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

தமிழகத்தில் நடந்த பொதுத்தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்கள் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என வாக்குறுதி அளித்திருந்தது.

அதன்படி, தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழக முதலமைச்சரான மு.க.ஸ்டாலின்,தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவச பேருந்து பயண சலுகையை அறிவித்தார்.

இதுவரை, ஆட்டோக்களில் சென்று வந்த பெண்கள் அரசு நகர் பேருந்தில் இலவசமாக பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இச்சலுகையை பெண்கள் அதிகஅளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருவவோர் வருமானத்தை இழந்து பரிதவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தங்களது குடும்பங்களும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக, சிவகங்கை மாவட்ட ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் கூறியதாவது: கொரானா தொற்று ஊரடங்கால் வருமானமின்றி சிரமப்பட்டு வந்தோம். தற்போது ஊரங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்து ஆட்டோ உள்ப பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு அறிவித்த பெண்களுக்கான சிறப்பு சலுகையால் ஆட்டோவில் அதிகம் பயணிக்கும் பெண்கள் பேருந்தில் இலவச பயணத்தை நாடிச்செல்வது அதிகரித்துவிட்டது. எங்களது வருமானம் இழப்பை ஏற்படுத்தியதுடன் எங்களை நம்பியுள்ள குடும்பத்தினரையும் வறுமையில் தள்ளியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு தங்களுக்கு உதவிதொகை வழங்கிட, தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On: 18 July 2021 7:49 AM GMT

Related News

Latest News

 1. பல்லாவரம்
  சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர்...
 2. சங்கராபுரம்
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர்...
 3. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 4. தர்மபுரி
  தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 5. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 6. குன்னூர்
  குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி...
 7. குளித்தலை
  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
 8. கோபிச்செட்டிப்பாளையம்
  கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. தாராபுரம்
  'சிறுவர் செய்யும் தவறுக்கு, பெற்றோர் அபராதம் கட்டணும்'
 10. தமிழ்நாடு
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: ...