நாட்டரசன் கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவில் ஆடி முளைக்கொட்டு விழா

நாட்டரசன் கோட்டை அருள்மிகு ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் ஆடி முளைக்கொட்டு விழா இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாட்டரசன் கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவில் ஆடி முளைக்கொட்டு விழா
X

நாட்டரசன் கோட்டை அருள்மிகு ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன்.

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவில் ஆடி முளைக்கொட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இவ்விழா அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு நிகழ்வாக கோவில் மண்டபத்தில் உற்சவர் அம்மனை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து அலங்கார தீபம் நாக தீபம் மற்றும் பல்வேறு தீபாராதனைகள் காட்டப்பட்டு உதிரிப்பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்யப்பட்டன.

பின்னர், பஞ்சமுக தீபாராதனை காட்டப்பட்டு உடன் மங்கல வாத்தியங்களுடன் பல்லக்கில் எழுந்தருள செய்து கோவில் உள் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மனை வழிபட்டனர்.

Updated On: 23 July 2021 7:46 AM GMT

Related News