சிவகங்கை: ஊரக வளர்ச்சி துறை முகமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

சிவகங்கையில் ஊரக வளர்ச்சித் துறை முகமை அலுவலகத்தில் ஒப்பந்ததாரரிடம் அதிக லஞ்சம் கேட்பதாக வந்த புகாரை அடுத்து நடவடிக்கை.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகங்கை: ஊரக வளர்ச்சி துறை முகமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
X

சிவகங்கையில் ஊரக வளர்ச்சித் துறை முகமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை.

சிவகங்கையில் ஊரக வளர்ச்சித் துறை முகமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை. ஒப்பந்ததாரரிடம் அதிக லஞ்சம் கேட்பதாக வந்த புகாரை அடுத்து நடவடிக்கை.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை , ஊராட்சி துறையின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கிராம வளர்ச்சிக்கு தேவையான அனைத்து பணிகளுக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு திட்ட அலுவலரின் ஒப்புதலுடன் ஒப்பந்தகாரர்களின் மூலம் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முக்கியமான துறைகளில் ஒன்றான இந்த ஊரக வளர்ச்சி துறையில் மாவட்ட திட்ட அலுவலராக பணியில் இருந்த வடிவேல் என்பவர் பணிமாற்றம் செய்து சென்றுவிட்டதால், கடந்த 6 மாதமாக திட்ட அலுவலர் பணி காலியாக உள்ள நிலையில், தற்காலிகமாக பொறியாளரின் தலைமையில் ஊரகத் வளர்ச்சி துறை செயல்பட்டு வருகிறது.

இங்கு அதிக லஞ்சம் பெறப்படுவதாக சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து இன்று லஞ்ச ஒழிப்புத் துறை DSP மணிமன்னன் ஆய்வாளர் சந்திரன் உட்பட 5 பேர் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு இடையூறு ஏற்படாதவாறு தடுக்க சுமார் 10 ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு அலுவலக வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Updated On: 30 Sep 2021 10:39 AM GMT

Related News

Latest News

 1. ஆண்டிப்பட்டி
  இன்று தேனி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை
 2. கம்பம்
  தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
 3. கம்பம்
  நவ.1ல் கேரள எல்லை முற்றுகை: 5 மாவட்ட விவசாயிகள் அறிவிப்பு
 4. பவானிசாகர்
  பவானிசாகர் அணையில் இன்றைய நீர்மட்டம் 102 அடி: நீர் வெளியேற்றம் 5,400...
 5. தமிழ்நாடு
  1000க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி 200 கோடி மோசடி: ஒருவர் கொலை இருவர் கைது
 6. அந்தியூர்
  பர்கூர் மலைப் பாதையில் இரு வேறு சம்பவங்களில் வாகன விபத்து
 7. அந்தியூர்
  மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார்
 8. மேட்டூர்
  மேட்டூர் அணையில் இன்று காலை 101.05 அடியை எட்டிய நீர்மட்டம்
 9. பரமத்தி-வேலூர்
  பரமத்தி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
 10. ஈரோடு
  ஈரோட்டில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்