/* */

சிவகங்கை: ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ஒப்பந்ததாரரிடம் அதிக லஞ்சம் கேட்பதாக வந்த புகாரை அடுத்து ஊழல் தடுப்பு, கண்கா ணிப்புப்பிரிவு போலீஸார் திடீர் ஆய்வு

HIGHLIGHTS

சிவகங்கை:  ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
X

சிவகங்கையிலுள்ள ஊரக வளர்ச்சித்திட்ட அலுவலகத்தில் ஆய்வு நடத்த சென்ற  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு போலீஸார்.

ஒப்பந்ததாரரிடம் அதிக லஞ்சம் கேட்பதாக வந்த புகாரின் பேரில் சிவகங்கையில் ஊரக வளர்ச்சித் துறை முகமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை , ஊராட்சி துறையின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கிராம வளர்ச்சிக்கு தேவையான அனைத்து பணிகளுக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு, திட்ட அலுவலரின் ஒப்புதலுடன் ஒப்பந்தகாரர்களின் மூலம் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முக்கியமான துறைகளில் ஒன்றான இந்த ஊரக வளர்ச்சி துறையில், மாவட்ட திட்ட அலுவலராக பணியில் இருந்த வடிவேல் என்பவர் பணியிடமாறுதலில் சென்று விட்டார். இதனால், கடந்த 6 மாதமாக திட்ட அலுவலர் பணி காலியாக உள்ள நிலையில், தற்காலிகமாக பொறியாளரின் பொறுப்பில் ஊரக வளர்ச்சி துறை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒப்பந்ததாரர்களிடம் அதிக லஞ்சம் பெறப்படுவதாக, சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து இன்று லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி மணிமன்னன், ஆய்வாளர் சந்திரன் உட்பட 5 பேர் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு இடையூறு ஏற்படாதவாறு தடுக்க சுமார் 10 ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு, அலுவலக வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Updated On: 30 Sep 2021 10:20 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  3. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  4. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  5. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  6. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  7. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  8. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  9. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  10. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...