மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதிமுக எம்எல்ஏ நிவாரண உதவி வழங்கல்

சிவகங்கை நகர்ப்பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் 18 வகையான நிவாரண பொருட்களை வழங்கினார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் வழங்கினார்.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. நேற்றைய முன்தினம் பெய்த மழையால் சிவகங்கை நகர்ப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, சிவகங்கை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் 18 வகையான நிவாரண பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பினை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சிவகங்கை நகரின் முக்கிய வீதிகள் ஆன காந்தி வீதி, சத்தியமூர்த்தி தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கால்வாய்களின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்குமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் உடன் அதிமுக நகர கழக செயலாளர் ராஜா சேது உட்பட அதிமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2021-10-05T15:30:41+05:30

Related News