/* */

குடியிருப்பு அருகே பிடிபட்ட மலைப்பாம்பு : வனத்துறையிடம் ஒப்படைப்பு

தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்து சாக்கு மூடையில் கட்டி திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

HIGHLIGHTS

சிவகங்கை அருகே 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

சிவங்கை மாவட்டம், பாகனேரி அருகே சொக்கநாதபுரம் ஊராட்சியின் வனப்பகுதி ஓரத்தில் ஆலங்குளத்தான்பட்டி கிராமம் அமைந்துள்ளது இப்பகுதியில இன்று இரவு 9 மணிக்கு ரமேஸ் என்பவர் வீட்டின் அருகே எட்டடி முதல் 9 அடி வரை நீளமுள்ள மிகப்பெரிய மலைப்பாம்பு புதர் அருகே பதுங்கி இருந்தது. இதனைக் கண்டசொக்கநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் கணேசன் என்பவர் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இந்தப் பகுதிக்கு வந்த திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அதிகாரி சடையாண்டி தலைமையிலான தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்கு மூடையில் கட்டி திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் .இச்சம்பவம் பற்றிபொதுமக்கள் தெரிவிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும இரண்டு தடவை மலைப்பாம்பு ஊருக்குள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .


Updated On: 22 Sep 2021 6:29 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  5. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  6. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  7. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  8. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  9. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  10. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...