/* */

சிவகங்கை அருகே 17ம் நூற்றாண்டு வாமனக் கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கையை அடுத்த சோழபுரம் கிராமத்தில் 16ம் மற்றும் 17ம் நூற்றாண்டு நாயக்கர்கால வாமனக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சிவகங்கை அருகே 17ம் நூற்றாண்டு வாமனக் கல்வெட்டு கண்டெடுப்பு
X

சோழபுரம் குண்டாங் கண்மாயில் கண்டுடெடுக்கப்பட் 16 மற்றும் 17ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால கல்வெட்டு.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையை அடுத்த சோழபுரம் குண்டாங் கண்மாயில் 16 மற்றும் 17ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால கல்வெட்டு கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.

நாயக்கர்கள் மதுரையைச் சுற்றிலும் 72 பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்தனர். சக்கந்திபாளையத்திற்குட்பட்ட பகுதியாக சோழபுரம் இருந்திருக்கும். இங்கு கண்டறியப்பட்ட கல்வெட்டு நான்கரை அடி உயரமும் நான்கு பக்கங்களையும் கொண்டது.

ஒரு பக்கத்தில் வாமன உருவ சிற்பமும், மற்றொரு பக்கத்தில் சிதைந்த நிலையில் 30 வரிகளும் காணப்படுகின்றன. இது 16 மற்றும் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர்கால கல்வெட்டுகளாக இருக்குமென தொல்லியல் ஆர்வலர்கள் புலவர் காளிராசா சுந்தரராஜன், நரசிம்மன் ஆரோக்கியசாமி ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.

Updated On: 17 July 2021 9:23 AM GMT

Related News