காளையார்கோவில்: ஆசிரியர் வீட்டில் 150 பவுன் நகை, ரூ.6 லட்சம் திருட்டு

காளையார்கோவில் வசந்தம் நகரில், ஆசிரியரின் வீட்டில் 150 சவரன் நகை, 6 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
காளையார்கோவில்: ஆசிரியர் வீட்டில் 150 பவுன் நகை, ரூ.6 லட்சம் திருட்டு
X

திருடு நடந்த வீட்டில் விசாரணை மேற்கொண்ட போலீசார். 

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில், வசந்தம் நகரில் வசித்து வரும் வேதமுத்து மகன் ஜேசுதாஸ் (44 ). இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஆரோக்கிய ரோஸி, இவரும் அரசு பள்ளி ஆசிரியர்.

இருவரும், இன்று காலை வழக்கம் போல் பணிக்கு பள்ளிக்கு சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவன்,மனைவி இருவரும், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 150 சவரன் நகை, 6 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் திருடிச் சென்றது தெரியவந்தது.

உடனடியாக, திருட்டு சம்பவம் குறித்து காளையார்கோவில் காவல்துறைக்கு, ஜேசுதாஸ் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம், காளையார்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 14 Sep 2021 3:01 PM GMT

Related News

Latest News

 1. பல்லாவரம்
  சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர்...
 2. சங்கராபுரம்
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர்...
 3. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 4. தர்மபுரி
  தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 5. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 6. குன்னூர்
  குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி...
 7. குளித்தலை
  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
 8. கோபிச்செட்டிப்பாளையம்
  கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. தாராபுரம்
  'சிறுவர் செய்யும் தவறுக்கு, பெற்றோர் அபராதம் கட்டணும்'
 10. தமிழ்நாடு
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: ...