பணியில் மெத்தனம்: நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் 3 பேர் பணியிடை நீக்கம்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சாலை போடும் பணியை கண்காணிப்பதில் மெத்தனப்போக்குடன் இருந்ததாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

காளையார்கோவில் அருகே மருதகண்மாயில் இருந்து, ஓட்டணம் வரையிலான 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

இச்சாலை தரமற்று அமைக்கப்பட்டதாக அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்த புகாரின்பேரில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு அத்துறையின் அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, சென்னை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி மைய இயக்குனர் கீதா தலைமையிலான தரக்கட்டுப்பாட்டு குழுவினர் இச்சாலையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர்.

அதனடிப்படையில், தரமான முறையில் சாலை போடப்படுவதைக் கண்காணிக்காமல் மெத்தனமாக இருந்ததாக கூறி, இளையான்குடி உதவி கோட்ட பொறியாளர் மாரியப்பன், உதவி பொறியாளர் மருதுபாண்டி, தரக்கட்டுப்பாட்டு பொறியாளர் நவநீதி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து நெடுஞ் சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில் உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தென்மாவட்ட நெடுஞ்சாலைத்துறையினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புகாரை விசாரித்து எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 7 July 2021 10:39 AM GMT

Related News

Latest News

 1. திருநெல்வேலி
  நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்கள் வெளியீடு
 2. எடப்பாடி
  சேலம் மாவட்டத்தில் 88.20 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக எடப்பாடியில் 29...
 3. பவானிசாகர்
  சத்தியமங்கலம் நகராட்சியில் 100 சதவீத தடுப்பூசி செலுத்த இலக்கு
 4. அந்தியூர்
  ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் அதிகபட்சமாக 14.6 மி.மீ மழை
 5. ஆண்டிப்பட்டி
  இன்று தேனி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை
 6. கம்பம்
  தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
 7. கம்பம்
  நவ.1ல் கேரள எல்லை முற்றுகை: 5 மாவட்ட விவசாயிகள் அறிவிப்பு
 8. பவானிசாகர்
  பவானிசாகர் அணையில் இன்றைய நீர்மட்டம் 102 அடி: நீர் வெளியேற்றம் 5,400...
 9. தமிழ்நாடு
  1000க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி 200 கோடி மோசடி: ஒருவர் கொலை இருவர் கைது
 10. அந்தியூர்
  பர்கூர் மலைப் பாதையில் இரு வேறு சம்பவங்களில் வாகன விபத்து