சிவகங்கை கொரோனா விதிமீறல் - ஒரு கோடி அபராதமாக பெறப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் கொரானா விதிமுறைகளை மீறியவர்களிடமிருந்து ரூ 1.03 கோடி அபராதம் வசூல். மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகங்கை கொரோனா விதிமீறல் - ஒரு கோடி அபராதமாக பெறப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல்
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி

சிவகங்கை மாவட்டத்தில் கொரானா விதிமுறைகளை மீறியவர்களிடமிருந்து ரூ 1.03 கோடி அபராதம் வசூல். மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 1 கோடியே 35 லட்சத்து 19 ஆயிரத்து 460 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்

மேலும் அவர் தமிழக அரசின் உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை பொது முடக்கத்தை மீறிய பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


அதன்படி சுகாதார துறை சார்பில் ரூபாய் 92 லட்சத்து 500 ரூபாயும் ,காவல்துறை சார்பில் 68 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயும், வருவாய்த்துறை சார்பில் 19 லட்சத்து 48 ஆயிரத்து 560 ரூபாயும், ஊராட்சித் துறை சார்பில் இரண்டு லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாயும், பேரூராட்சி சார்பில் 3 லட்சத்தி 6 ஆயிரத்து 100 ரூபாயும், நகராட்சி நிர்வாகம் சார்பில் 7 லட்சத்து 38 ஆயிரத்து 700 ரூபாய் என மாவட்டம் முழுவதும் மொத்தம் ஒரு கோடியே 35 லட்சத்து 19 ஆயிரத்து 470 ரூபாய் அபராதத் தொகையாக வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல் துறை மூலமாக வாகன தணிக்கையின் போது விதிமுறைகளை மீறி பயணம் செய்த 1754 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On: 2021-06-07T17:17:16+05:30

Related News