/* */

கொரானா தடுப்பு - அமைச்சர் தலைமையில் ஆலோசனை.

ஆக்சிஸன் படுக்கை வசதிகள் 779 அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்.

HIGHLIGHTS

கொரானா தடுப்பு - அமைச்சர் தலைமையில் ஆலோசனை.
X

சிவகங்கை மாவட்டத்தில் கொரானா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரனா நோய்த்தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், அதனை தடுப்பதற்கு தமிழக அரசு முழு புதிய கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொரானா நோய் தொற்று தடுப்பு பணிகள் குறித்து, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி சிவகங்கை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கொரானா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றதாகவும், இதில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திருமபியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஆக்சிஸன் படுக்கை வசதிகள் 779 அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதனை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் இக்கூட்டத்தில் மாவட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Updated On: 15 May 2021 12:23 PM GMT

Related News