கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
X

சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் பல முறை முறையிட்டும் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மாணவ, மாணவியர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கையில் செயல்பட்டு வரும் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் மொத்தம் சுமார் 2500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை என்றும் மேலும் கிராமப் புற மாணவர்கள் அதிகளவில் வந்து பயிலும் நிலையில் பேருந்து நிறுத்தம் இல்லாததால் கல்லூரி வாயிலில் பேருந்துகள் நிறுத்தாமல் செல்வதாகவும் மாணவர்கள் இதனால் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாகவும் கூறி கல்லூரி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படும் நிலையில் இன்று மாணவ, மாணவியர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 1 March 2021 12:15 PM GMT

Related News