திமுக எதைச் செய்தாலும் விமர்சனமாகிறது: கனிமொழி

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திமுக எதைச் செய்தாலும் விமர்சனமாகிறது: கனிமொழி
X

திமுகவின் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று முதல் திமுகவின் மாநில மகளீரனி செயலாளர் கனிமொழி சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். இன்று சிவகங்கை கோர்ட் வாசல் பகுதியில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்ததுடன், பேருந்து நிலைய வாயிலில் வேனில் இருந்தபடியே பிரச்சாரம் மேற்கொண்டபின் தொண்டி சாலையில் உள்ள வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் வேலுநாச்சியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் அமைச்சர்கள் குறித்து திமுகவின் புகார் பொய் என முதல்வர் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு, விசாரணை ஆரம்பித்தபின் அது தெரியவரும் என்றும் அமைச்சர்கள் மீதான புகார் பொய் என்றால் ஏன் விசாரணைக்கு தடைகோரி நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். தமிழக மீனவர்கள் இறப்பு குறித்த தமிழக பா.ஜ.கவின் அறிவிப்பு குறித்த கேள்விக்கு மத்தியில் ஆளும் அவர்கள் நினைத்தால் இலங்கை அரசை வலியுறுத்தி மீனவர்கள் அவமானப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் உண்மையில் அக்கறை இருந்தால் தமிழக பா.ஜ.க ஆளும் அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் பதிலளித்தார். மேலும் வேல் வாங்கிய ஸ்டாலின் குறித்த சமூக வலைதள விமர்சனம் குறித்து பதிலளித்த மகளிரணி செயலாளர் கனிமொழி திமுக எதை செய்தாலும் விமர்சனம் செய்வதும் பொய் பிரச்சாரம் செய்வதும் நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே அதுபற்றி பதில் சொல்ல தேவையில்லை என தெரிவித்ததுடன் மேலும் தேர்தல் நேரத்தில் வேலை ஏந்தி வேசம் போடுவதாக எழுந்த கேள்விக்கு யார் வேஷம் போடுகிறார்கள் என்பது தேர்தலின்போது தெரியும் என்றும் ஜல்லிக்கட்டில் செயித்தவருக்கு பொய்யான தங்க காசை வழங்கியவர்தானே பழனிச்சாமி என பதிலளித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் ஏராளமான திமுகவினர் உடனிருந்தனர்.

Updated On: 25 Jan 2021 11:25 AM GMT

Related News

Latest News

 1. பல்லாவரம்
  சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர்...
 2. சங்கராபுரம்
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர்...
 3. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 4. தர்மபுரி
  தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 5. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 6. குன்னூர்
  குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி...
 7. குளித்தலை
  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
 8. கோபிச்செட்டிப்பாளையம்
  கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. தாராபுரம்
  'சிறுவர் செய்யும் தவறுக்கு, பெற்றோர் அபராதம் கட்டணும்'
 10. தமிழ்நாடு
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: ...