தாயுடன் குளிக்க சென்ற குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் அருகே தாயுடன் குளிக்க சென்ற அக்கா, தம்பி இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டுவருகின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தாயுடன் குளிக்க சென்ற குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
X

தேவகோட்டையை சேர்ந்தவர்கள் கணேசன், ராமலெட்சுமி தம்பதியர். கணேசன் மைக்செட் போடும் கூலி தொழில் செய்துவருகிறார். இவர்கள் இருவருக்கும் 7 வயதான ஹன்சிகா மற்றும் 5 வயதான பழனிக்குமார் என்கிற இரு குழந்தைகள் உள்ள நிலையில், பொங்கல் விடுமுறைக்காக ராமலெட்சுமி இந்த இரண்டு குழந்தைகளுடன் தான் பிறந்த ஊரான மறவமங்களத்தை அடுத்துள்ள பாப்பான்கண்மாய் கிராமத்திற்கு வந்துள்ளார். குழந்தைகளுக்கு கொரோனா காரணமாக பள்ளி திறக்காததால் இங்கேயே தங்கியுள்ள நிலையில் இன்று அருகில் உள்ள கண்மாய் பகுதிக்கு இரண்டு குழந்தைகளையும் அழைத்துகொண்டு துணி துவைத்து குளித்து வர சென்றுள்ளார். அச்சமயம் இரண்டு குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காளையார்கோவில் காவல்துறையினர் இரு குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்த நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து வெவ்வேறு பகுதிகளில் 4 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மழையின் காரணமாக நீர் நிலைகள் நிறைந்துள்ளதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அதிக கவனமாக கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

Updated On: 22 Jan 2021 5:27 PM GMT

Related News

Latest News

 1. தாராபுரம்
  திருப்பூர்: முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
 2. பெரம்பலூர்
  பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது
 3. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 5 பேர்...
 4. திருக்கோயிலூர்
  கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ
 5. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒருவர்...
 6. மயிலாடுதுறை
  ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய...
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்
 8. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 9. குன்னூர்
  நீலகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 10. குன்னூர்
  ஊட்டி மலை ரயில் பாதையில் விழுந்த பாறைகள் வெடி வைத்துத் தகர்ப்பு: சேவை...