/* */

முழு நிவாரண தொகை விவசாயிகள் கோரிக்கை

1லட்சத்தி 75 ஆயிரம் ஏக்கருக்கும் முழு நிவாரண தொகை வழங்க குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை.

HIGHLIGHTS

முழு நிவாரண தொகை விவசாயிகள் கோரிக்கை
X



சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்தி 75 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களுக்கு முழுமையான நிவாரண தொகை வழஙக வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்களது பகுதிகளில் உள்ள குறைகள் குறித்து ஆட்சியரிடம் கோரிக்கைவிடுத்தனர். இதில் அனைத்து விவசாயிகளும் ஒட்டு மொத்தமாக மாவட்டம் முழுவதும் 1லட்சத்தி 75 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிரானது அன்மையில் பெய்த தொடர் மழையின் காரணமாக தண்ணீரில் மூழ்கி வீணான நிலையில் அதற்கு இன்சூரன்ஸ் தொகை மட்டும் போதாது, எனவே அரசு முழுமையான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கைவிடுத்தனர். இதனை கேட்ட ஆட்சியர் கண்டிப்பாக முழுமையான நிவாரண தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து கடலை பயிரிடப்பட்ட விவசாயிகளும் தங்களது பயிர் முழுவதுமாக அழுகியுள்ளதாக கூறி அதனை காட்டி தங்களுக்கும் நிவாரணம் வழங்க கோரிக்கைவிடுத்தனர். மேலும் இந்த ஆண்டு பயிரிடப்பட்ட கரும்பு கொள்முதல் செய்ய கரும்பாலை இயங்காததால் பெரிதும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் வரும் ஆண்டாவது ஆலையை திறக்கவோ அல்லது வேறு ஆலைக்கு கரும்பை அனுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தனர். இவை அனைத்திற்கும் ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Updated On: 22 Jan 2021 10:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது