/* */

இளையான்குடி அருகே சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடம் : அமைச்சர் திறப்பு

புனரமைக்கப்பட்டுள்ள பள்ளிக்கட்டிடத்தினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரிய கருப்பன் திறந்து வைத்தார்

HIGHLIGHTS

இளையான்குடி அருகே சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடம் : அமைச்சர் திறப்பு
X

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தனியார் பங்களிப்புடன் ரூ.20.லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடத்தினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தனியார் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடத்தினை, மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன்ரெட்டி, தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிரவிக்குமார் முன்னிலையில் திறந்து வைத்து அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளிக்கல்வித் துறையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்கள். மாணாக்கர்களுக்கு கற்றலுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கி வருவது மட்டுமன்றி, அனைத்துப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கென தனிகவனம் செலுத்தி, அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

அவ்வாறு, அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்திடும் வகையில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், நன்கொடையாளர்களும் உறுதுணையாக இருந்து, அரசிற்கு மேலும் வலு சேர்த்து வருகின்றனர். அந்தவகையில், இளையான்குடி பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் கடந்த 1934-ம் ஆண்டு, இளையான்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது.

பள்ளி எண்:4-ல் மாணவர்களுக்கெனவும், பள்ளி எண்:5-ல் மாணவியர்களுக்கெனவும் இந்நாள் வரை செயல்பட்டு வருகிறது. பள்ளி தொடங்கிய காலத்தில் பள்ளி எண்:4-ல் 272 மாணவர்களும், அவர்களுக்கென 9 ஆசிரியர்களும் மற்றும் பள்ளி எண்:5-ல் 266 மாணவியர்களும், அவர்களுக்கென 8 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்நிலையில், மாணாக்கர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து மேற்கண்ட பள்ளியில் 23 மாணவர்களும், 24 மாணவிகளும் உடைய ஈராசிரியர்களைக் கொண்ட பள்ளியாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்ற பிறகு பள்ளிக் கல்வியை வலுவூட்டும் விதமாக, பள்ளி மேலாண்மைக் குழுவினை மறுகட்டமைப்பு செய்ய உத்தரவிட்டுள்ளதன்படி, இப்பள்ளியில் செயல்பட்டு வந்த பள்ளியின் மேலாண்மைக் குழு தற்போதைய நிலை குறித்தும், இந்நிலையை மாற்றி புத்துயிர் ஊட்டும்விதமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதனடிப்படையில், பள்ளி எண்:4 மற்றும் பள்ளி எண்:5-ஐ சார்ந்த வார்டு:1 மற்றும் வார்டு:2 உறுப்பினர்களின் முயற்சியாலும், இப்பகுதியின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் எழுச்சிமிகு இளைஞர் குழுவினர் உதவியாலும், மேலும் முன்னாள் மாணவர்களாகிய தன்னார்வலர்கள் கச்சியார் மு.ஆ.ஜூம்மாகான் (மாயா), கருசா யு.ஜாகீர் உசேன் ஆகியோர்கள் ஒன்றிணைந்து, இப்பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் பொருட்டு, அரசுடன் இணைந்து தற்போது பள்ளியில் புதூர் எண்:4-ல் ரூ.15. லட்சம் மதிப்பீட்டில் இப்பள்ளிக்கென தரைத்தளம், மேற்கூரை சீரமைத்து, வண்ண ஓவியங்களுடன் கூடிய சுற்றுச் சுவர், கழிப்பறை வசதி, மாணவர்களுக்கான இருக்கை வசதி, சமையல் அறை சீரமைப்பு, குடிநீர் வசதி ஆகியவைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று புதூர் எண்:5-ல் ரூ. 5 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் என மொத்தம் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு புனரமைப்புப் பணிகள் மேற்கொண்டு, பெருமை சேர்த்துள்ளனர். இதனால், இப்பகுதியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக புதுப்பொழிவுடன் உருவெடுத்துள்ள இப்பள்ளியில் தற்போது மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கும் இவை அடிப்படையாக அமைந்துள்ளது.

இதுதவிர, வருகின்ற கல்வியாண்டில் இப்பள்ளிக்கென வாகன வசதி, செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளனர். மேலும், இப்பள்ளியில் மாணாக்கர்களின் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கும் அனைவரும் ஒன்றிணைந்து உறுதுணையாக இருந்திட வேண்டும். இன்றையதினம் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் இப்பள்ளி விழாவானது, இவ்வூர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு மாநாட்டைப் போலவும், திருவிழாவைப் போலவும் நடத்திடும் விதமாக சிறப்பாக நடைபெற்று வருவது மிகுந்த மனநிறைவை ஏற்படுத்துகிறது.

இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தற்போது இப்பள்ளிக்கு உதவியுள்ள தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மேலும் இப்பகுதியின் மேம்பாட்டு வளர்ச்சிக்கும் அரசுடன் இணைந்து உறுதுணையாக இருந்திட வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.சுவாமிநாதன், புதூர் பெரிய பள்ளிவாசல் தலைவர் ஜனாப்.மு.தௌலத்கான், இளையான்குடி பேரூராட்சித் தலைவர் ஜனாப்.யு.நஜ்முதீன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கோ.முத்துச்சாமி (சிவகங்கை), மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் அ.சரஸ்வதி, மானாமதுரை நகராட்சித் தலைவர் மாரியப்பன் கென்னடி, பேருராட்சி செயல் அலுவலர் கோபிநாத், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் சைபுநிஸா பேகம், ராவியத்துல் பதவியாள், புதூர் எழுச்சிமிகு இளைஞர் குழுவினர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஜமாத்தார்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 March 2023 2:00 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?