/* */

பணியின்போது இறந்த டாஸ்மாக் பணியாளர் குடும்பத்துக்கு அரசு நிவாரணத் தொகை

சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரில் நிகழ்ந்த பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவத்தில் தீக்காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார்

HIGHLIGHTS

பணியின்போது இறந்த டாஸ்மாக் பணியாளர் குடும்பத்துக்கு அரசு நிவாரணத் தொகை
X

டாஸ்மாக் பணியாளர் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்குகிறார், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன்

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தபடி, டாஸ்மாக் நிறுவன பணியாளர் அர்ஜூனன் , குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டரூ.10. இலட்சத்திற்கான காசோலையினை,கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறினார்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், காரைக்குளம் ஊராட்சி, இண்டங்குளம் கிராமத்தைச் சார்ந்த டாஸ்மாக் நிறுவன பணியாளர் அர்ஜூனன் குடும்பத்தினருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதித்தொகை ரூ.10. இலட்சத்திற்கான காசோலையினை, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிரவிக்குமார் முன்னிலையில், நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறினார்.

பின்னர் அமைச்சர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரில் கடந்த 03.03.2023 அன்று நிகழ்ந்த பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவத்தில் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர் அர்ஜூனன், தீக்காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ்நாடு முதலமைச்சர், அர்ஜூனன், குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10. இலட்சத்திற்கான காசோலையினை வழங்கிடவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கிடவும் உத்தரவிட்டார்.

அதன்படி, அர்ஜூனன், குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட ரூ.10. இலட்சத்திற்கான காசோலையை, அர்ஜூனன், குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு, ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர், அறிவிப்பின்படி, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கிடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

Updated On: 18 March 2023 3:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்