/* */

கீழடி அருங்காட்சியக குழிகளில் தேங்கிய மழைநீரால் சேதமடையும் முதுமக்கள் தாழி

அரிதிலும் அரிதாகக் கருதக்கூடிய பழங்காலப் பொருட்களை மழையிலிருந்து பாதுகாக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்

HIGHLIGHTS

கீழடி அருங்காட்சியக குழிகளில் தேங்கிய மழைநீரால் சேதமடையும் முதுமக்கள் தாழி
X

கீழடி அகழாய்வு குழியில், மழைநீர் தேங்கியுள்ளதால் சேதமடையும் முதுமகள் தாழிகள்

கீழடி அருகே கொந்தகை அகழாய்வு தள குழிகளுக்குள் தேங்கி கிடக்கும் மழை நீரால் முதுமக்கள் தாழிகள் சேதமடைந்து வருகிறது. இதை முறையாக பாராமரிக்க வேண்டுமென சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2014 ம் ஆண்டு முதல் கட்ட அகழாய்வு பணி மத்திய அரசால் துவங்கப்பட்டது. இதன் மூலம் தமிழர்களின் தொன்மையான நாகரிகம் வெளி உலகத்திற்கு தெரியவந்தது. தொடர்ந்து 3 கட்டங்களை மத்திய அரசு மேற்கொண்ட நிலையில் அகழாய்வு பணியினை மத்திய அரசு நிறுத்திக்கொண்டது. எனினும் தமிழக தொல்லியல் துறை மூலமாக அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

விரிவான அகலாய்வு பணியினை மேற்கொள்ள கடந்த 2020 ஆண்டு முதல் கீழடி, கொந்தகை, மணலூர் மற்றும் அகரம் ஆகிய 4 இடங்களில் அகழாய்வு பணியினை தமிழக தொல்லியல் துறையினர் மேற்கொண்டனர். இதில் கீழடி தொழிலில் நகரமாகவும், அகரம் மக்கள் வாழ்விடமாகவும், கொந்தகை இடுகாடாகவும் உள்ளது தெரிய வந்தது. தற்பொது 7 ம் கட்ட அகழாய்வு பணி கடந்த செப்டம்பர் மாதம் 30 ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதுவரை கீழடி தொகுப்பில் மேற்கொண்ட அகழாய்வில் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரமாக பிராமி எழுத்துகளுன் கூடிய சுடுமண் பானைகள், சுடுமண்ணால் கட்டப்படட கட்டிடங்கள், மனித மற்றும் விலங்கின் எலும்புகள், தங்கம், இரும்பு, யானை தந்தத்தினால் செய்யப்பட்ட அணிகலன்கள் என சுமார் 15 ஆயிரம் பொருட்கள் கிடைத்தன.

இந்நிலையில், மணலூரில் 6ம் கட்டமாக நடைபெற்ற அகழாய்வு தளத்தில் பொருட்கள் கிடைக்க பெறாத நிலையில் அத்தளம் மூடப்பட்டது. இந்தாண்டு முதல் கீழடி தொகுப்பு அகழாய்வு தளங்கள் பொதுமக்கள் பார்வைக்கு திறந்த வெளி அருங்காட்சியமாக வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது மழை காலம் என்பதால் கீழடியில் மேற்கூரை அமைக்கப்பட்டு பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டுள்ளது.

அகரம், கொந்தகை அகழாய்வு தளங்களில் மழை நீர் அகழாய்வு குழிகளுக்குள் சென்று விடாத வகையில், தார் பாய் கொண்டு மூடி பாதுகாக்கப்பட்டது. ஆனால் ,கொந்தகை அகழாய்வு தளத்தில் உரிய முறையில் பாரமரிக்காமல் விடப்பட்டதால், குழிகளுக்குள் தண்ணீர் சென்று தேங்கியுள்ளது. இதனால் குழிகளுக்குள் இருக்கும் அகழாய்வு ஆதாரங்களாலான பெரிய வடிவிலான முதுமக்கள் தாளிகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் ஆதாரங்கள் தண்ணீராலும், கால்நடைகளாலும் சேதமடையவும், திருடு போகவும் வாய்ப்புள்ளது. எனவே அறிதிலும் அறிதாக கருதக்கூடிய இப்பொருட்களை தமிழக அரசு பாதுகாக்க துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 28 Nov 2021 3:15 PM GMT

Related News