/* */

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது

HIGHLIGHTS

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு:  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை
X

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் அளிக்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, இந்த ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை தெளிவு பெறுமாறு சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரும் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. .

இதையடுத்து, ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளது என்பது பற்றி முடிவு செய்ய செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும், வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதே தவறு எனக் கூறிய நீதிபதிகள் அனைத்து கோப்புகளையும் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்டனர்

Updated On: 5 Sep 2023 5:05 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  2. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  3. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  4. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  7. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்