/* */

பள்ளிகளை தூய்மைப்படுத்த நிதி வசூலிக்க கூடாது: தலைமை செயலாளர்

பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் நிதி வசூலிக்க கூடாது என்று தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

பள்ளிகளை தூய்மைப்படுத்த நிதி வசூலிக்க கூடாது: தலைமை செயலாளர்
X

தலைமைச் செயலாளர் இறையன்பு.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கல்வி நிறுவனங்கள் செயல்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதையடுத்து இந்த ஆண்டு கட்டாயம் பொது தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்த நிலையில், 10 ,11 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது.

இதனிடையில் தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார் . அதில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறப்பதால் தீவிரமாக தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் தலைமை ஆசிரியர்கள் நிதி வசூலிக்க கூடாது. பள்ளிகளை புதுப்பொலிவுடன் சீரமைத்து வகுப்புகளை நடத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.

Updated On: 9 Jun 2022 5:21 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!