/* */

மகளை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

தனது மகளை கழுத்தை வெட்டிக் கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

HIGHLIGHTS

மகளை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
X
கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள்.

சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் வனிதா-கண்மணி தம்பதியினர். கண்மணி கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கண்மணியின் மகள் தித்திமிலா பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு சேலம் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்துள்ளார். கொரோனா காரணமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி அன்று காணாமல் போயுள்ளார். இதனை அடுத்து தந்தை கண்மணி காரிப்பட்டி காவல்நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி அன்று மகளை காணவில்லை என காரிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.

காரிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்த நிலையில், நேற்று மின்னாம்பள்ளி பகுதியில் கோவிந்தராஜ் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணறில் ஒரு பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் எலும்பு கூடாக சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். ஒரு மாதத்திற்கு முன்பே பெண்ணை கொலை செய்து கிணற்றில் வீசி இருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறைக்கு எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களில் பெண் காணாமல் போயிருப்பது குறித்து விசாரணை மேற்கொண்டதில் கூலித்தொழிலாளி கண்மணி அவருடைய மகள் காணாமல் போனதை அறிந்தனர். இதனைத்தொடர்ந்து சடலத்தை சென்று பார்த்த பெற்றோர்கள் இறந்து கிடந்தது தனது மகளின் சடலம் என்று கண்டறிந்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

தொடர்ந்து காவல்துறையினர் மகளை காணவில்லை என்று புகார் கொடுத்து மூன்று மாதங்களாக காவல்துறையினர் தேடி வராத நிலையில் தற்பொழுது சடலமாக கிடப்பதை கண்டு காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மகளை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து பெற்றோர் கூறுகையில் தனது மகளை காணவில்லை என்று கடந்த 3 மாதத்திற்கு முன்பு காவல்துறையில் புகார் தெரிவித்தும் காவல்துறையினர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை புகாரில் 4 வாலிபர்கள் மீது சந்தேகம் உள்ளது. என்பது குறித்தும் தெரிவித்திருந்தோம் ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் என் மகளை கடத்திச் சென்று கொலை செய்து உள்ளனர் என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து இனி இதுபோன்ற சம்பவங்கள் வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டனர்.

Updated On: 21 Oct 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?