/* */

சேலம் அருகே மதுபாட்டிலால் பெண் குத்திக்கொலை: இருவர் கைது

Salem News Today: சேலம் அருகே மதுபாட்டிலால் பெண் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

சேலம் அருகே மதுபாட்டிலால் பெண் குத்திக்கொலை: இருவர் கைது
X

பைல் படம்.

Salem News Today: சேலம் அருகே மதுபாட்டிலால் பெண் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள காரிப்பட்டி குழந்தைசாமி நாடார்நகர் பகுதியில் வசித்து வருபவர் ராமர் மனைவி சசிகலா (வயது 31). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இவருடைய ஒரு மகனும், மகளும் கணவரான ராமருடன் ராசிபுரத்தில் வசித்து வருகின்றனர்.

இதனிடையே காரிப்பட்டி பகுதியில் தனியாக வசித்து வந்த சசிகலா, மகாலட்சுமிநகர் பகுதியில் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அயோத்தியாப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட சசிகலாவுக்கு, அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சசிகலா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

போலீசாரின் விசாரணையில், சசிகலாவின் கணவர் ராமர், அவருடைய நண்பர் கிருஷ்ணராஜ் ஆகிய இருவரும் சசிகலாவை மதுபாட்டிலால் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது. அதாவது, சசிகலாவை அழைத்துச் சென்று குடும்பம் நடத்த ராமர் வந்ததாகவும், அவருக்கு துணையாக கிருஷ்ணராஜ் வந்ததாகவும் தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் சசிகலா மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சசிகலாவை, அவருடைய கள்ளக்காதலன் கொலை செய்ததாக முதலில் ராமர் நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் சசிகலாவின் கணவர் ராமர், அவருடைய நண்பர் கிருஷ்ணராஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

Updated On: 15 Jun 2023 7:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்